ஆதரவாளர்களுடன் களத்தில் குதிக்கும் தினகரன் : அச்சத்தில் உறைந்த எடப்பாடி
தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித்துக்கு, டிடிவி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெ., மறைவுக்கு முன் தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா ஓய்வு பெற்றதையடுத்த மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஜெ., மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சை,
அ.தி.மு.கவுக்குள் குழப்பம் என்று பல்வேறு நெருக்கடிகளை வித்யாசாகர் ராவ் சந்தித்து வந்தார்.
அ.தி.மு.கவுக்குள் குழப்பம் என்று பல்வேறு நெருக்கடிகளை வித்யாசாகர் ராவ் சந்தித்து வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி.தினகரன் களம் இறங்கி தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேருடன் ஆளுநரை சந்தித்த அவர் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கடிதம் அளித்தார்.
ஆனால் தினகரனின் அத்தகைய வேண்டுகோளை,வித்யாசாகர் ராவ் நிராகரித்தார். அதன் பின்னர் அந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்று விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு பன்வாரிலால் புரோகித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு டிடிவி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post a Comment