அந்த இடத்தில் பச்சை குத்தி இணையத்தில் பிரபலமான நபர்

டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி  வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
28 வயது நிரம்பிய இவர்  பச்சைக் குத்துவதில் கைதேர்ந்த நபர் . உடல்  முழுவதும் பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில்  பிரபலம்ஆகியுள்ளார் இந்த நபர்.
இதுவரையிலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய பொழுதுபோக்கு என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதினாறு வயதில் பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கிய கரண் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். உடலில் எத்தனை பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பச்சைக் குத்துவதோடல்லாமல்  உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.
உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து  இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார் இவர். தற்போது அந்தப் புகைப்படங்களை நெட்டில் ஏற்றியுள்ளார்.கண்களில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று இவர் குறிப்பிடுகிறார். ''வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின்னர் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்'' என்று கூறியுள்ளார். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு  இலட்சக் கணக்கில்    செலவு ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

No comments